Ad Widget

உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அமைதி பேரணி!

உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட மகளிர் அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதிப் பேரணி யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து நெடுந்தூர பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதன் போது பெண்கள் அமைப்பினர் பெண் பிரதிநிதிகள் மகளிர் அபிவிருத்தி குழுக்களின் உறுப்பினர்கள்...

பிரபாகரனின் வீட்டு காணிக்கு சிவப்பு எச்சரிக்கை!!

வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. காணியில் இருந்த வீடு முற்றாக அடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. பற்றைகளினால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டி, குறித்த காணியினை துப்புரவு செய்து...
Ad Widget

புதிய முகக்கவசத்தை உருவாக்கியுள்ள சீன ஆராய்ச்சியாளர்கள்

சீன ஆராய்ச்சியாளர்கள், மக்கள் கொவிட்-19 அல்லது காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதா என்பதை அறிய உதவும் வகையில் முகக்கவசம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவக்கூடியதாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஷாங்காயில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆறு விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வின்படி, முகக்கவசத்தில் உள்ள ஒரு சென்சார் காற்றில் உள்ள...

யாழில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும் அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக...

சிறுமிகளை வன்புணரும் கூடாரமாக யாழ். கோட்டை! மாவட்ட செயலகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணத்திலிருந்து தீவுப்பகுதிக்குச் செல்லும் பிரதான மார்க்கமான பண்ணைப் பாலத்தின் கீழ் பகுதி மற்றும் கோட்டைக்கு வெளியேயுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக பல சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என யாழ். மாவட்ட செயலகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முனியப்பர் ஆலயத்துக்கு பின்புறமாகவும், கோட்டைக்கு வெளியேயும் உள்ள பகுதியிலேயே பாடசாலை சிறுமிகள் பலர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். காதலர்கள்...

சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம்

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!!

அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வாக்களிப்பு ஒன்று இடம்பெறும் நாட்களில் அனைத்து நாடாளுமன்ற பிரநிதிகளும்...