Ad Widget

வட மாகாண ஆளுநர் செயலக முன்றலில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் போராட்டம்!!

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகமுன்றலில் இன்றைய தினம் (16) வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 அரசியல் கைதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தாது விசாரணைகளை...

வேலணையில் ஈ.பி.டி.பி யின் எதிர்ப்பை மீறி அஞ்சலி செலுத்திய கூட்டமைப்பு!

வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வை ஈழமக்கள் ஜனநாயக கட்சி புறக்கணித்ததுடன் , சபையையும் தவிசாளர் ஒத்திவைத்தார். வேலணை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று (வியாழக்கிழமை) சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது, சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை...
Ad Widget

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக சாணக்கியன் உண்ணாவிரதப் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பயங்கரவாத சட்டத்தை ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரத போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்...

தியாகி திலீபனின் நினைவேந்தலில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் சந்தேகங்களை உருவாக்குகிறது!

தியாகி திலீபனின் 35ம் ஆண்டு நினைவேந்தலில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் பாரிய சந்தேகங்களை எழுப்புவதாக யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் சாடியிருக்கின்றது. தியாகி திலீபனின் நினைவேந்தலில் இடம்பெற்ற முரண்பாடுகள் தொடர்பாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே குறித்த விடயம் தொிவிக்கப்பட்டிருக்கின்றது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1987ம் ஆண்டு செம்டம்பர் மாதம் 15ம் திகதி தமிழ் மக்களின்...

நினைவேந்தல் செய்ய இன்று முட்டிமோதுவோர் கோட்டபாய ஜனாதிபதியாக பதவியேற்ற பின் எங்கிருந்தீர்கள்? சிவாஜி

நினைவேந்தல் நடத்துவதற்கு மோதிக் கொள்பவர்கள் கோட்டபாய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் எங்கிருந்தார்கள்? என கேள்வி எழுப்பியுள்ள வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோட்டபாய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தியாகி திலீபனின் நினைவேந்தல் துாபி முன்னால் காகம் கூட பறக்கவில்லை. ஆனால் நான் கோண்டாவிலில் நினைவேந்தல் செய்து கைது செய்யப்பட்டேன் எனவும் கூறியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில்...

சுகாஷை கண்டித்து மாவீரர்களின் பெற்றோர் சார்பில் அறிக்கை!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அரசியல் பேசிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷை கண்டித்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளி முத்துக்குமார் மனோகர் (பஷீர் காக்கா) மாவீரர்களின் பெற்றோர் சார்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். நல்லூரில் நேற்று நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பிப்பதற்கு முன்னர் சட்டத்தரணி சுகாஷ் ஒலிபெருக்கி வாயிலாக...

சாதனை படைத்த கொழும்பு தாமரை கோபுரம்!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, 500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை பெற்று, கோபுரத்தை பார்வையிடுவதற்காக சந்தர்ப்பம் உள்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் நேற்று கிடைத்த வருமானம் புதிய சாதனையை எட்டியுள்ளது. அதற்கமைய, திறக்கப்பட்ட முதல்...

ரஷ்யாவின் கொடூர முகம் – கொத்துக் கொத்தாக மீட்கப்படும் சடலங்கள்

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து Izyum புதைகுழியில் இருந்து 440 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட உக்ரேனிய நகரமான Izyum இல் சுமார் 440 சடலங்கள் அடங்கிய வெகுஜன புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கார்கிவ் பிராந்தியத்திற்கான தலைமை பொலிஸ் புலனாய்வாளர்...