Ad Widget

தாமரை கோபுரத்தை பார்வையிட சீனர்களுக்கு இலவசம்? – போலி நுழைவுச்சீட்டு குறித்து சீன தூதரகம் விளக்கம்!

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலியான நுழைவுச்சீட்டு ஒன்று சமூகத்தில் பரவி வருவதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம், சமூக ஊடகங்களில் பரவும் நுழைவுச்சீட்டு போலியானது என்றும் அதை சமூக ஊடகங்களில் பகிரும் முன் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. எவ்வாறாயினும் தாமரை கோபுரம் குறித்த இலவச விளம்பரத்திற்கு...

தொழில் தேடுவோர் அல்லது சுயதொழில் ஆரம்பிக்க இருப்போருக்கு மாவட்ச் செயலரின் விசேட அறிவிப்பு!!

தொழில் தேடும் இளைஞர், யுவதிகள் அல்லது சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்க முயற்சிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு யாழ்.மாவட்டச் செயலர் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, யாழ்.மாவட்டச் செயலகமானது மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில்...
Ad Widget

அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை அதிகரிப்பு!

40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. 120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 120 ரூபாயில் இருந்து 225 ஆகவும் 80 பக்க புத்தகம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை 40 பக்க CR...

தற்காலிகமாக ஓட்டுநர் உரிமத்தின் காலம் நீடிப்பு!

6 மாத காலத்திற்கு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை ஓராண்டு காலத்திற்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது. மாவட்ட அலுவலகத்திற்கோ அல்லது கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கோ வந்து ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பளை பிரதேசத்தில் உள்ள காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்படவில்லை – டக்ளஸ்

பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களின் இவ்வாறான அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுமபோது ஊடக நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென...

வட்டுக்கோட்டையில் வாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் உள்ள கோவில் ஒன்றிலிருந்து 11 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மீட்கப்பட்ட அனைத்து வாள்களும் கோயில் பாவனையில், கோவிலின் உள்ளேயே இருந்துள்ளதாகவும், வாள்கள் கோவில் சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுபவை எனவும் விசாரணையில்...

தாமரை கோபுர நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிப்பு!!

தாமரைக் கோபுரத்திற்கு பிரவேசிப்பதற்காக நுழைவுச்சீட்டு ஒன்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலவசமாக கட்டணம் செலுத்தாது பிரவேசிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் பிரஜைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் 500 ரூபா கட்டணமும், வரையறையில்லா அடிப்படையில் 2000 ரூபா கட்டணமும் அறவீடு செய்யப்படும்...

பாடசாலை மாணவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – பெற்றோர்களுக்கு அவசர அறிவிப்பு

கோவிட் நோய் தவிர, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என அரச மருத்துவ அலுவலர்கள் மன்றத்தின் செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அது குறித்து மேலும் பேசிய அவர், "இப்போது பலர்...

கொழும்பில் இருந்து திருகோணமலை சென்ற ரயிலில் தீ!!!

கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த விரைவு ரயிலின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தமையால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் வேயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த ரயில்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய சிவப்பு நிற ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன. . தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில்...

ஆயுதங்களைக் கைவிட்டு ஓடிய ரஷ்ய வீரர்கள் – 6 மாத கால போரில் திருப்புமுனை

உக்ரேனிய எதிர்த்தாக்குதல் காரணமாக ரஷ்ய வீரர்கள் மிக வேகமாக தப்பி ஓடுகிறார்கள் என்று உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போர் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், நாட்டின் கிழக்கில் உக்ரைன் படைகளின் கணிசமான வெற்றிகள் ரஷ்யாவைச் சுற்றி வளைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெற நிர்ப்பந்தித்தன. உக்ரேனிய உள்நாட்டு விவகார அமைச்சின்...