மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு – நாளை முதல் பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை!

முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். எனவே நாளை(26) முதல் பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நிர்வாணமாக்கப்பட்ட போராளிகளின் படங்கள் எம்மூடாகவே வெளிவந்தது: எஸ்.சிறிதரன்

நிர்வாணமாக்கப்பட்ட போராளிகளின் படங்கள் எம்மூடாகவே வெளியே போனது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற புகைப்படப்பிடிப்பாளர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, அவர் மேலும் கூறுகையில், ‘புகைப்பட பிடிப்பு என்பது சாதாரண விடயமல்ல. இங்கு ஒரு இனப்படுகொலை நடந்தது என்பதற்கு புகைப்படங்களே சான்றுகளாகின....
Ad Widget

91 அத்தியாவசிய மருந்துபொருட்கள் முற்றாக தீர்ந்துபோகும் நிலை!!

நாட்டில் 91 மிகவும் அவசியமான மருந்துபொருட்களின் கையிருப்பு முற்றாக தீர்ந்துபோகும் ஆபத்து உருவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மருத்துவ களஞ்சியத்தில் கடந்த வாரம் இந்த நிலை காணப்பட்டதாக அரசாங்க மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால்...

நல்லூர் கந்தசுவாமியின் இரதோற்சவம் இன்று!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று காலை இடம்பெற்றது. வசந்த மண்டவத்தில் விஷேட அபிஷேங்கள், ஆராதனைகள் இடம்பெற்று, பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை, சமேதராக தேரில்வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்வாலயத்தில் மஹோற்சவம் கடந்த 02.08.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 26.08.2022 அன்று...

பயங்கரமாக பதிலடி கொடுக்கப்படும்! உக்ரைன் ரஷ்யாவிற்கு பகிரங்க எச்சரிக்கை!!

உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தினால் அதற்கு பயங்கரமாக பதிலடி கொடுக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் இன்றைய தினம் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த நிலையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜெலன்ஸ்கி மேலும் தெரிவிக்கையில், இன்று உக்ரைன் தனது சுதந்திர தினத்தைக்...