- Saturday
- July 5th, 2025

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக...

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் திறைசேரி செயலாளரால் குறிப்பிடப்பட்ட தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன் விதிகளின்படி அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள்,...

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் மேதகு அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை...

நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர். இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற நிலையில்...

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் சோதனைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏற்பாடுகளை செய்துள்ளது. மொத்த விற்பனையாளர்களுக்கு தற்போது திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 96 பேர் நேற்று (ஞாயிற்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரை நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 668,012ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு ஆயிரத்து 113 பேர் வைத்தியசாலைகளில்...