இனி Full Tank எரிபொருள் வழங்க தீர்மானம்!!

பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக (Full Tank) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் பயணிகள் போக்குவரத்து தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இன்று முதல் முழுமையாக பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது. மேலும், இந்த தீர்மானத்தின் மூலம் பல நாட்கள்...

யாழ்ப்பாண நகரத்தில் பொருட்களை மலிவாக பெற்றுக்கொள்ளலாம்! -யாழ் வணிகர்கழகம்

கொழும்பு புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதில் முரண்பாடுகள் காணப்படுகின்றதென யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆ.ஜெயசேகரன் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக...
Ad Widget

கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறு பேருக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களில் சிலரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த நபர்கள் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர் . இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனாத் தடுப்பூசியை ஒரு வருடத்துக்கு முன்னர்...

9 வருடங்களின் பின்னர் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிப்பு!

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள்...

பாடசாலை மாணவர்களும் பகுதிநேரமாக வேலை செய்யலாம் : அரசாங்கம்

பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது. அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழிற்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வயதிற்குட்பட்ட...

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

நேற்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி 12.5 கிலோ 246 ரூபாயாலும் 5 கிலோ 99 ரூபாயாலும் 2.2 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் இன்று தீவிர பாதுகாப்பு!

கொழும்பு நகரில் இன்று (9ம் திகதி) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு செயற்பாட்டாளர்கள் தயாராகியுள்ளதால், கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பை பாதுகாப்பதற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கலவர தடுப்பு...

இராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க உக்ரைன் பெண்கள் செய்யும் காரியம்!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடி வருகிறது. இந்நிலையில், தமது நாட்டு படையினர் துணிச்சலாகப் போராடி, மன உறுதியை உயர்த்திக் கொள்ள, உக்ரைன் நாட்டுப் பெண்கள் ஒரு வித்தியாசமான யோசனையை முன்னெடுத்துள்ளனர். இதன்படி, உக்ரைன் பெண்கள் தங்கள்...