Ad Widget

பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

பிரதமர் தினேஷ் குணவர்தன சற்றுமுன்னர் தனது கடமைகயை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டு அவர் கடந்த 22 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர் தினேஷ் குணவர்தன பதவியேற்றதன் பின்னர் பொரலுகொட பிரதேசத்தில் உள்ள தனது பெற்றோரின் நினைவுத்தூபிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்லவுள்ளார்.

வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால் பறிபோன உயிர்!

நயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நயினாதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் செல்வக்குமார் (வயது-42) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். நயினாதீவு இறங்குதுறையில்...
Ad Widget

நீண்ட விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரமே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் ஒன்லைன் ஊடாக கற்க முடியும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென் மாகாண...

மீண்டும் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை!

பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பரவுவதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார். முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி போன்ற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்....

யாழில்.பொது போக்குவரத்துக்கள் முடங்கின!

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும்...

நாடு முழுவதும் இன்று புதிய நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம்!!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமான முறையில் QR குறியீட்டின் கீழ் எரிபொருள் வழங்கும் நடைமுறை வெற்றியளித்துள்ளது. இதன் காரணமாக நாடு...

ரணிலை எச்சரித்த ஜப்பான்!!

இன்னும் ஒரு தடவை இவ்வாறான ஒரு வன்முறை சம்பவம் நடைபெறுமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் உதவி ஒன்றும் இலங்கைக்கு வழங்கப்படாது என ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எச்சரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...