Ad Widget

ஜப்பான் முன்னாள் பிரதமர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் நெஞ்சில் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் NHK செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஜப்பானில் கடந்த 2006 - 2007 மற்றும் 2012 - 2020 வரை பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே....

எரிபொருள் விநியோகத்தை இடை நிறுத்தியது லங்கா ஐ.ஓ.சி!!

நாட்டிலுள்ள லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவிக்கையில், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதனை இன்றும் ( 8 ) மற்றும் நாளையும் ( 9 ) பாதுகாப்புக் காரணங்களுக்காக இடைநிறுத்த தீர்மானித்துள்ளோம்....
Ad Widget

கோட்டா பதவி விலகும் வரை ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்து அங்கேயே தங்கியிருப்போம் – சஜித் அணி

ஜனாதிபதி மாளிகையை நாளை (சனிக்கிழமை) சுற்றி வளைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை அங்கேயே தங்கியிருப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தாங்கள் கோட்டை ரயில் நிலையத்தில் ஒன்றுகூடி, பின்னர் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்வோம் என்றும் ஜனாதிபதி பதவி விலகும் வரை அங்கேயே இருப்போம் என்றும் அக்கட்சியின் பொதுச்...

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு புதிய திகதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், வெள்ளிக்கிழமைகளில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளைப் வழங்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் அடுத்த 48 மணிநேரத்திற்குட்பட்ட காலத்தில் நடைமுறையில் இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதற்காக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்வதற்கான வசதிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி… https://ceypetco.gov.lk/usd-consumer-online-registration/

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் தற்போது மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திணைக்களத்தின் தகவலின்படி, புதிதாக 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 64 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நேற்று...

கர்ப்பிணித் தாய்மார்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்து!

தற்போது வேகமாகப் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் சனத் லெனாரோல் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கர்ப்பிணித் தாய்மார்கள் முடிந்தவரை முகக் கவசம் அணியுமாறும், வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக மேலும் மக்கள்...

யாழில் அரசாங்கத்திற்கெதிரான மாபெரும் பேரணிக்கு அழைப்பு!!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக்கோரியாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ்.நகர் நோக்கி நாளை துவிச்சக்கர வண்டிப் பேரணியொன்றை மேற்கொள்ள சில பொது அமைப்புகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள்...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் மோதல் – ஒருவர் பலி

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி - மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (07) இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதலில் ஹபராதுவ - ஸ்வாலுவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்....

உக்ரைனில் போரிட கைதிகளை ஊதியத்திற்கு களமிறக்கும் ரஷ்யா

உக்ரைனில் சிறை கைதிகளை களமிறக்கி போரை நீட்டிக்கும் முயற்சியில் ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கைதிகள் உக்ரைனில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு உயிருடன் திரும்பி வந்தால் அவர்களின் தண்டனைக் காலம் இரத்து செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சிறைகளில் இருந்தே தற்போது கைதிகளை தெரிவு செய்து வருவதாக...