Ad Widget

சீமெந்து பக்கெட்டின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு!!

50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பக்கெட் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, சீமெந்து பக்கெட் ஒன்றின் புதிய விலை 3,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது. ஒரு வருட காலத்திற்கு முன்னர் 50 கிலோ கிராம் சிமெந்து பக்கெட் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து...

பெற்றோல் கப்பலுக்கான முற்பணத் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை!!

பெற்றோல் கப்பலுக்கான முற்பணத் தொகையை இன்று செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் இன்று இதனை அறிவித்தார். எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள பெற்றோல் கப்பலுக்கான கொடுப்பனவே இவ்வாறு செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் குறித்த கப்பலை முன்கூட்டியே கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
Ad Widget

தொண்டமனாறு பகுதியில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நால்வர் கைது!

தொண்டமனாறு பகுதியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த கைது நவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்....

எதிர்காலத்தில் மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்படும் – ரணில்

எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் தொகை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பல நாள் மீன்பிடி கப்பல்களுக்கு டீசல், எரிவாயு, மளிகை பொருட்கள் மற்றும் ஐஸ் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். கடற்றொழில்...

யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றது. இன்று காலை யாக பூஜையைத் தொடர்ந்து மகாபூர்ணாகுதி, தீபாராதனை, விசேஷ பூஜை என்பன இடம்பெற்று, வேத ஸ்தோத்திர, திருமுறை, நிருத்திய கீத வாத்ய உபசாரங்களுடன் கும்பங்கள் புறப்பட்டு வீதிப்பிரதட்சிணமாக வந்து...

நெருக்கடிக்குள் மக்களை தொடர்ந்தும் தள்ளாமல் ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் – பேராயர்

நாட்டில் ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது நாட்டின் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன, சஜித் தரப்பினர் உடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை. நாட்டை கட்டி எழுப்புவதுற்கு நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஸ்திரமான சர்வ கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதே நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது...

கொரோனா வைரஸின் பதிய திரிபு பரவும் அபாயம் – 4 தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்து

கொரோனா வைரஸின் பதிய திரிபு மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி...

முப்படையினரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற்ற நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு பல தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும்...

இலங்கையில் நாளுக்கு நாள் உச்சம் தொடும் துவிச்சக்கர வண்டி விலை

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடியால், சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதால், இருப்பு தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வியாபாரிகள் துவிச்சக்கர வண்டிகளை நாளுக்கு நாள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்வதாகவும், குறிப்பாக சாதாரண...

ரஷ்யா மீது கை வைத்தால் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் – எச்சரிக்கும் முன்னாள் சுவில் தூதர்

ரஷ்யா மீது கைவைத்தால், பின் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதை பாரபட்சமில்லாமல் விமர்சிக்கும் முன்னாள் சுவிஸ் தூதரான Yves Rossier உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் மீதும் தவறு இருக்கிறது எனவும் கூறியுள்ளார். ரஷ்யாவை காயப்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்கான பின்விளைவுகளை சந்திக்கவும் தயாராக...