Ad Widget

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை என்னால் மாற்றியமைக்க முடியும்!! – பிரதமர் ரணில்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை தன்னால் மாற்றியமைக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க எனினும் 18 மாதங்களின் பின்னரே ஸ்திரதன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளார். அல்ஜசீராவிற்கான பேட்டியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். 2023 கடினமானதாகயிருக்கப்போகின்றது ஆனால் 2024இல் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அல்ஜசீராவிற்கு வழங்கிய...

எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

பாதுகாப்பு தரப்பினருடன் இணைத்து மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு. கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கத்தின் வருவாயை நோக்கியே...
Ad Widget

மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகப்பும் இல்லை!! விசேட கொடுப்பனவு தொடர்பிலும் அவதானம்!

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விசேட கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இதற்கு முன் 30 இலட்சமாக...

வாகனம் வைத்திருக்கும் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியையடுத்து பல்வேறு மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய, வீடுகள் மற்றும் வீதியோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்து எரிபொருள் திருடப்படுவது தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சில பிரதேசங்களில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் இருந்து எரிபொருள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் தாங்கிகளின்...

உக்ரைனில் தாக்குதலை தொடர வேண்டும் – படைகளுக்கு புடின் உத்தரவு

லிசிசான்ஸ்க் நகரை ரஷ்யா கைப்பற்றியதை அடுத்து, உக்ரைனில் தாக்குதலை தொடர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். "முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின்படி" தங்கள் நோக்கங்களைத் தொடர மற்ற முனைகளில் உள்ள படைகளுக்கு புடின் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, லுஹான்ஸ்க் பகுதி முழுவதும் இப்போது ரஷ்ய கைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிராந்தியத்தின்...

இந்த நாடு ஒரு பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது!!

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் 74 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவர்கள் மக்களை தம்முடைய வாக்குகளுக்காக பாவித்தார்கள் ஆனால் இந்த...

எரிவாயுவை ஏற்றியக் கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம் – லிட்ரோ

இலங்கைக்கு நாளை (புதன்கிழமை) வரவிருந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 11 மற்றும்...

வட்டுவாகலில் நேற்று பதற்றம் : இராணுவம் குவிப்பு

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றை கிராமத்து மக்கள் திரண்டு அகற்றுவதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியது. வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பொங்கலுக்குரிய ஏற்பாடாக முல்லைத்தீவு கடலில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு ஆண்டு...