- Friday
- July 4th, 2025

நவீன மற்றும் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தைவிட விறகு பயன்படுத்தும் இந்நாட்டு பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நவீன சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும்...

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் நேற்று (07) நிறைவு பெறும் நேரத்தில் குளவி கூடு கலைந்து தாக்கியதில் காயமடைந்த 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளது....

கொழும்பு சுகததாச அரங்கில் நேற்று திங்கட்கிழமை (07) நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் மேலும் 3 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பமானது. ஆனால், அன்றைய தினம் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் முதலாம் நாள் போட்டிகள்...

பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றமை காரணமாக எதிர்காலத்தில் பல துறைகளில் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குரிய போதிய வருமானம் இல்லாததால் இந்த நிலை ஏற்படலாம் என கூறப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள்...

நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் வழமை போன்று டீசல் மற்றும் பெற்றோல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக டீசல் மற்றும் பெட்ரோல் குறைந்த அளவிலேயே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ஏற்கனவே நீண்ட வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன....

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேவேளை சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. நேற்றையதினம் (7) இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர...

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு மோசமான நிலையில், காணப்படுவதாக வைத்திய நிபுணர் க.காண்டீபன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க முடியாது கடும் நெருக்கடியில் வைத்தியர்கள் கையறுநிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளமையினால் சிகிச்சைகளுக்கு தேவையான பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது....

சமகாலத்தில் இலங்கையில் நாளாந்தம் நடக்கும் படுகொலைகளின் பின்னணி குறித்து புலனாய்வு பிரிவினர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில் 7 பேர் மர்மநபர்களால் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாதாள உலகத் தலைவர்களின் உத்தரவுக்கு அமைய கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர்...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரைக் குறிவைத்துக் கடந்த சில நாட்களாகப் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் 7 பேர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று வங்கி மேலாளராக பணிபுரிந்த விஜய் குமார் என்பவரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த பரபரப்பு முடிவதற்கு தற்போது மற்றொரு...

உணவுப்பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம் என முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலநக நாடுகள் எதிர்நோக்கி வரும் உணவுப் பற்றாக்குறை உலகிற்கு கொரோனா தொற்றுநோயைப் போன்ற சுகாதார அச்சுறுத்தலைக் குறிக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரின் விளைவாக உணவு மற்றும் எரிசக்தியின் விலை உயர்வு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல...

ரஷ்யா மேலும் 61 அமெரிக்க அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது.முன்னணி பாதுகாப்பு மற்றும் ஊடக நிர்வாகிகளுக்கு இவ்வாறு பொருளாதார தடை விதித்துள்ளதுடன், அவர்கள் நாட்டிற்குள் நுழைவதையும் தடை செய்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள், ஊடக தளங்கள், தரமதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் விமானம் மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்களின்...