Ad Widget

மின்தடை, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்!! – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!!

அரசியல் உறுதித்தன்மையை உடனடியாகக் கொண்டுவருமாறு அனைத்து அரசியல் தலைவர்களையும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொள்கிறார். இப்போது அது நடக்கவில்லை என்றால், மக்கள் தினமும் 10-12 மணிநேர மின்தடை, அதிக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய தட்டுப்பாட்டை அடுத்த வாரம் எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரிக்கிறார். “இந்த நேரத்தில் எந்த இறக்குமதி பொருள்களிலும் பணத்தை...

அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் – பாதுகாப்புச் செயலாளர்

அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது...
Ad Widget

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றுடன் (புதன்கிழமை) முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயத்தையும் உள்ளடக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்திடம் வலியுறுத்தினார் சாணக்கியன்!

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களை உள்ளடக்கம் செய்யாத ஒரு எதிர்காலம் இலங்கையில் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டின் எதிர்காலம் குறித்த 13 முன்மொழிவுகளை வெளியிடும் நிகழ்வு இன்று(புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து...

மீண்டும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்!!

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று (10) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளனர். வன்முறையை ஆதரித்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்த தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்வாக சேவைகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தருணத்தில் நாடு அராஜகமாகி விடுவதைத் தடுக்க உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு...

பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதங்களை விளைவிப்போர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு!

பொதுமக்களின் சொத்துக்களை திருடுவோர், சேதங்களை விளைவிப்போர் மீது முப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள்...

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் மாயம்!

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்ற நிலையில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்டது. அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர் . இந்த நிலையில்...

அசனி சூறாவளி தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கே 680 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது

மேற்கு மத்திய மாகாணத்தில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த அசனி சூறாவளி தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கே 680 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்வதாகவும் நாளைய தினம் சூறாவளியாக வலுவிழக்க கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 90 கி.மீ...

வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துங்கள் – ஜனாதிபதி கோட்டா பகிரங்க கோரிக்கை

மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பலவேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க...

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த!

பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவிய இராஜினாமா செய்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்!

மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்ப்பட்டுள்ளது. இதேவேளை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் – மஹிந்த

பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இலங்கையில் உணர்ச்சிகள் அதிகமாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை,...

காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம் குவிப்பு!! இராணுவத் தளபதி களத்தில்!!

காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை விலக்கிக்கொண்டு இராணுவத்தினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த பகுதிக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை கண்காணிப்பதுடன் நிமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர...

கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்!!

உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்த வகையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்திய பகுதிகளுக்கு குறித்த ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கே குறித்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை...

தையிட்டியில் தனியார் காணியில் விகாரை!! கட்டுமானப் பணிகளை ஆராய்ந்தார் இராணுவத் தளபதி!!

வலி.வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேற்றையதினம் நேரில் வருகை தந்தார். பலாலியில் அமைந்துள்ள யாழ்பாணம் படைத் தலைமையகத்துக்கு நேற்று காலை வருகை இராணுவத் தளபதி, விகாரைக்குச் சென்று கட்டுமானப் பணிகளை நேரில் ஆராய்ந்தார். வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரையை அமைப்பதற்கு...

“அவசரகால சட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்”

அவசரகால சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தபட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு அரசாங்கம் மக்களின் அமைதியான போராட்டங்களை நசுக்கும் முயற்சியினையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம்...

10 மணித்தியால மின்வெட்டு??? – இலங்கை மின்சார சபையின் விளக்கம்

நாட்டில் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார். எதிவரும் வாரம் முதல் 10 மணித்தியாலங்கள் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இலங்கை மின்சார சபையினால் அவ்வாறான...

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பால் மா 2,545 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 400 கிராம் பால் மாவின் விலை 1,020 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 230 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

வடக்கு மாகாணம் தழுவிய போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வடக்கு மாகாணம் தழுவிய பாரிய கண்டனப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஈடுபடவுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை 9 மணியளவில் இடம்பெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சகல வைத்தியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts