- Sunday
- July 6th, 2025

கொழும்பு காலிமுகத்திடல் “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர். கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற 32 வயதுடைய குடும்பத்தரே இவ்வாறு...

ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு: 1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் 2. சுசில் பிரேமஜயந்த் – கல்வி அமைச்சர் 3. கெஹலிய ரம்புக்வெல்ல...

வெசாக் தினத்தை முன்னிட்டு பொது அமைப்புக்களினால் யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஒவ்வொருவருடமும் வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நாக விகாரையில் வசிக்கின்ற பௌத்த துறவிகளுக்கு குறித்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இன்றைய வருடமும் நாக விகாரையில் அமைந்துள்ள இந்து பௌத்த ஸ்தலங்களில் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு...

விக்னேஸ்வரனின் தோற்றப் பொலிவை வைத்து பொட்டு தாடி என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள அரசியல் விமர்சனம் என்பது மிகவும் அநாகரிகமானது என்.ஸ்ரீகாந்தா தெரிவிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே என்.ஸ்ரீகாந்தா இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்...

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் போராட்டம் செய்யும் இளைஞர்களும் சில அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம்,...