Ad Widget

வவுனியாவில் சீன மொழியை தாங்கியவாறு போராட்டம்!!

வவுனியாவில் இன்று (28) மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணியில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பதாதைகளை தாங்கியவாறு போராட்டம் மேற்கொண்ட மக்கள் சீன மொழியையும் தாங்கி பதாதைகளுடன் போராட்டத்தை மேற்கொண்டிருந்ததனை அவதானிக்க முடிந்தது. இன்று நாடாளாவிய ரீதியாக...

யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் போராட்டத்தில் குதிப்பு

யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன யாழ் பல்கலைகழக...
Ad Widget

யாழ்.குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களே தஞ்சமடைந்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று புதன்கிழமை குருநகர் பகுதியில் இருந்து படகொன்றின் மூலம் சென்று, இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் கரையிறங்கிய வேளை தமிழக...

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று (வியாழக்கிழமை) இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “களவாஞ்சி பொலிஸாரினால் எனக்கு...

யாழில் தொழிற்சங்க பணி புறக்கணிப்பால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்பு!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி இன்றைய தினம் (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால்...

சுமந்திரனால் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐ.தே.க ஆதரவு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தற்போது தயாரித்து வருகின்றார். குறித்த பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என்றும் அக்கட்சி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதியின் மீது நாடாளுமன்றுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்ட வேண்டியது அவசியம் என ஐக்கிய...

இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி!!

இன்று (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும், மாலை...

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சிளின் இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி

சமூக மற்றும் அரசியல்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்ளிடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்றில் சுயாதீனமாக...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் (UTUMO) அறிவித்துள்ளன. ‘வாக்கெடுப்புக்கு தலைவணங்கும் – அரசாங்கம் வீட்டுக்குச் செல்கிறது’ என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி...