Ad Widget

தைப்பொங்கலை முன்னிட்டு யாழில் வர்த்தக சந்தை ஆரம்பம்!

தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற் துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமானது. வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில் முனைவோர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிக் கூடங்களில்...

தையிட்டியில் முன்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் – தையிட்டியில் முன்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார். இந்த நிலையில் இன்று காலை தையிட்டி கலாவல்லி முன்பள்ளியின் புதிய கட்டிடத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
Ad Widget

இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்!!

சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் ரமேஸ் பத்திரன குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நிலைமை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் இரண்டு வருடங்கள் கடந்த...

வீட்டில் மருத்துவ பராமரிப்பு சேவைகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கிறது யாழ்.மாவட்ட சுகாதாரத் திணைக்களம்

யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார...

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார். தமிழராய்ச்சி மாநாட்டிலே படுகொலை செய்யப்பட்ட அவர்களை நினைவு கூறும் நிகழ்வு தமிழாராய்ச்சி...

தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு எதிராக வழக்கு!

மாமன் கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடிகளை வாங்கி வெடிக்க வைத்துள்ளார். அதனை கண்ணுற்ற மாணவனின் மாமன் மாணவனை கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரமுற்ற மாணவன் தோட்டத்திற்கு சென்று...

மாதகல் மீனவர் சாவு!! : கடற்படை காரணமா??

மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த திலீபன் (வயது-32) என்ற மீனவரே உயிரிழந்துள்ளார். மீனவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் மாதகல் கடற்பரப்பில் 200 மீற்றர் தூரத்தில் படகு கவிழ்ந்து காணப்பட்டுள்ளது....

மின்வெட்டு அட்டவணை அறிவிப்பு!! – அட்டவணை இணைப்பு

நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மணிநேர மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு அட்டவணையைப் பார்க்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்க. power cut schedule

யாழில் வியாபாரி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இளைஞர் கைது

யாழ். கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 24 வயதுடைய ஒருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொக்குவில் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்ட நிலையில் அவர் மீது நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் உள்ளன. நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம்...

தமிழ் கட்சிகள் உட்பட மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணையகம்

2021 ஆம் ஆண்டுக்காக மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன பதிவு செய்யப்பட்டுள்ளதாக...

தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்க முடியாது!!

நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறைகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஏற்றுமதி வருவாய் சரிவு, கட்டண உயர்வு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, மூலப்பொருட்கள் இறக்குமதி...