Ad Widget

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் – முதல்வர்

வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றதென யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் நாயன்மார்கட்டு குளப்புனரமைப்பு பணிகள் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

மக்களை ஏமாற்றுகின்றதா லிட்ரோ கேஸ் நிறுவனம்??

பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று 9 ஆம் திகதி காலை சிவப்பு சீல் லேபில் ஒட்டப்பட்ட லிட்ரோ கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு எடுத்துச் சென்ற நிலையில், அந்த லேபிளை அகற்றியபோது, ​​சிவப்பு லேபிளுடன் பின்னால் பழைய வெள்ளை லேபிள் சுற்றி இருந்துள்ளது. இந்நிலையில் லிட்ரோ காஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாக...
Ad Widget

பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா கொத்தணிகள் – மீண்டும் மூடப்படுகின்றன பாடசாலைகள்?

பாடசாலைகளுக்குள்ளும் கொரோனா கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை சகலரும் நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். “பாடசாலை கட்டமைப்புக்குள் நிர்வாகப் பிரிவினர்...

யாழில் “உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் திட்டம் ஆரம்பம்!

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை நேற்றையதினம் மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக “உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல இடங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் பிரதான...

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பி. போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றும் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் என்பவர் வாடகைக்கு தங்கியிருந்து கல்வி...

வெளிநாடு பயணமாகும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி போட்டிருப்பது அவசியமில்லை!!

இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ வல்லுநர் ரஞ்சித் பதுவன்துதாவ இதனைத் தெரிவித்துள்ளார். பயணம் செய்யும் நாடு மற்றும் தேர்ந்தெடுக்கும் விமானத்தைப் பொறுத்து தடுப்பூசி விதிமுறைகள் மாறுபடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்....

எரிவாயு விவகாரம் தொடர்பில் அரச நிறுவனங்களின் அலட்சியம்!! மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

எரிவாயு விவகாரம் தொடர்பில் அரச நிறுவனங்களின் அலட்சியம் குறித்து இலங்கை கட்டளைகள் நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் குழுவினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த...

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 533ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 757 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா...