Ad Widget

இ.போ.ச சாரதியின் கவனயீனம் – கிளிநொச்சியில் 17 வயது மாணவியின் உயிர் பறிபோனது!

கிளிநொச்சியில் ஏ-9 வீதியில் இன்று (15) காலை நடந்த விபத்தில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாணவி மஞ்சள் கோடு ஊடாக வீதியைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு உயர்தர வகுப்புக்கு அனுமதி பெற வந்தபோதே இந்த விபத்து நடந்துள்ளது. மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மாணவி மஞ்சள்...

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல – நாகலிங்கம் வேதநாயகம்!

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ்.மாவட்ட ஓய்வு நிலை அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற தனது சேவை நயப்பு விழாவில் கலந்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், “நான் இன்று ஓய்வு பெற்று இருக்கின்றேன் நான்...
Ad Widget

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு?

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இன்று(திங்கட்கிழமை) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய்யை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை...

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் திறப்பு

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக செயற்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!!

முதன்மை ரயில் பாதையிலான தொடருந்து போக்குவரத்து வியாங்கொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு – காங்கேசன்துறை இடையே இன்று திங்கட்கிழமை மூன்று தொடருந்து சேவைகள் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஜய ரஜதஹன மற்றும்...

தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? கலாநிதி ஆறு. திருமுருகன்

தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி, சென்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஓய்வுநிலை மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனின் சேவை நயப்பு விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் நேற்று முற்பகல்...

கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....