Ad Widget

யாழ். பல்கலை இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனா தெற்று!

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 5 விரிவுரையாளர்களுக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவுரையாளர்களுடன் மாணவர்கள் மூவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர்...

யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தின் கட்டடப் பராமரிப்பு செலவை 5 ஆண்டுகள் இந்தியா பொறுபேற்கும்

யாழ்ப்பாணம் மத்திய கலாசார மண்டபத்தின் கட்டடப் பராமரிப்புச் செலவை இந்திய மத்திய அரசு பொறுப்பேற்றுக கொள்ளும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர், மத்திய கலாசார மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார். தமிழ் மக்களின் கலாசார பண்பாடுகளுக்காக இந்திய...
Ad Widget

பொலிஸாரின் கடமைக்கு பிரதேச சபை உறுப்பினர் இடையூறு; பொலிஸார் துப்பாக்கிச் சூடு!!

வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்ததால் பொலிஸார் வானத்தை நோக்கி சூடு நடத்தி எச்சரித்தனர். இந்தச் சம்பவம் ஊரெழு பகுயில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றது. “ஊரெழு பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். மோட்டடார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்தனர் அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை...

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடம் வழங்கப்படாது – யாழ். மாநகர முதல்வர்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில் மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக சனிக்கிழமை ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் – புதிய ஆய்வில் அடையாளம்

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட 90-180 நாட்களுக்குப் பின்னர் ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா கூறினார். இந்தப் புதிய ஆய்வு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தீவிரமான...