Ad Widget

காய்ச்சல் அல்லது உடல்வலி இருக்கும் கோவிட் நோயாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் காய்ச்சல் அல்லது உடல் வலி இருப்பவர்கள் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருந்தியல் பேராசிரியர் வைத்தியர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே...

யாழ் மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை சரியான முறையில் பின்பற்றுகின்றனர் – யாழ்ப்பாணம் பொலிசார் பாராட்டு!

கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வட மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மிகவும் சரியான முறையில் பின்பற்றுவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள்முதல் இதுவரையில் யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடி காணப்படுவதாக பொலிஸார்...
Ad Widget

வடக்கில் நேற்றுவரை 327 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் மட்டும் 224 பேர்

வடக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை (ஓகஸ்ட் -26) வரை 23 ஆயிரத்து 36 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 327 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிளவானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 224 பேர் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரவல் 2020 ஜனவரியில் ஆரம்பித்த...

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை!!

வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. விபத்தினால் மூளைச்சாவடைந்து இணுவிலைச் சேர்ந்த தங்கராசா பிரிஞ்சன் என்ற இளைஞரின் இரண்டு சிறுநீரகங்களும் இரண்டு நோயாளிகளுக்கு தலா ஒன்று என மாற்றப்பட்டன. சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் உயிர் வாழ்ந்த இருவருக்கும் சிறுநீரகங்கள் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு!!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட...