Ad Widget

யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவர் கோவிட்-19 நோயினால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 5 பேருக்கே கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் மருதடி லேனைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் சங்கானையைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண்...

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 198 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் நேற்று (24.08.2021) கொரோனா தொற்றால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில், ஆண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 37 ஆண்களும், 14 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81 ஆண்களும். 65 பெண்களுமாக 198 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டில் கொரோனா...
Ad Widget

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பொதி!

சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொதிகளையே இவ்வாறு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு,...

ஊரடங்கு உத்தரவை நீடிக்கும் முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்!!

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. கடந்த 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் அதனை தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள்...