Ad Widget

வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு!

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொறோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு சுமார் 16 இலட்சம்...

ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!!

சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள், “சிறுமியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான தடைச்சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில்...
Ad Widget

நிவாரணப் பணியை இடைநிறுத்த முற்பட்ட இராணுவம்- பருத்தித்துறையில் அமைதியின்மை

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கிராமம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கான நிவாரணப் பணியினை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர். இந்த நிவாரணப் பணியானது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இராணுவத்தினருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டிருந்தது. இராணுவம் மற்றும்...

மக்களுக்கு கடமையாற்றும்போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல – வடக்கின் பிரதம செயலாளர்

மக்களுக்கு கடமையாற்றும் போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல என வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் - நான்...

விக்னேஸ்வரன் வழக்கு மாகாண அதிகாரம் பற்றி உண்மைகளை அம்பலப்படுத்தும் – கஜேந்திரகுமார்

வடக்கு மாகாணப் பிரதம செயலாளரின் நியமனம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவிருப்பது மாகாண அதிகாரம் பற்றி மக்களுக்கு உண்மைகளை வெளிக் கொண்டுவருவதற்குப் பொருத்தமானதாக அமையும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில்...

கரவெட்டியில் திருவிழாவில் கலந்துகொண்ட 49 பேருக்கு கொரோனா

கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எழுமாறாக 179 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 49 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஆலயத் திருவிழாவில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அறியப்பட்ட நிலையில் கரவெட்டி சுகாதார...

யாழ் மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர் மாற்றம் குறித்து பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்!

யாழ் மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்ட அரசாங்க அதிபரை பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். யாழ் மாவட்டத்தில் 95% மானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர், மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தினை...

வல்வெட்டித்துறையில் 16 பேருக்கு கொரோனா!

வல்வெட்டித்துறையில் நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதி முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியிலுள்ள 166 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ்...