Ad Widget

சேதன பசளை உற்பத்திக்கான புதிய இயந்திரம் இராணுவத்தினரால் அறிமுகம்!

சேதன பசளை உற்பத்திக்கு பயன்படும் இலை குழைகளை சிறு சிறு துண்டுகளாக்கும் “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” எனும் புதிய இயந்திரம் அண்மையில் இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய இயந்திரம் இராணுவத்தின் 4வது மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் படையணி மற்றும் 5வது பொறியியலாளர் சேவை படையணியின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அக்ரி ஷ்ரெடர்...

வார இறுதி விடுமுறை நாள்களில் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் திட்டமில்லை

வார இறுதி நாள்களில் நீண்ட விடுமுறை உள்ள போதிலும் நாட்டில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க எந்த திட்டமும் இல்லை என்று கோவிட்- 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள மாகாண பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே இன்னும் நடைமுறையில் உள்ளன என்று...
Ad Widget

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி இடம்பெற வேண்டும் – கூட்டமைப்பு!

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் வீட்டிலே பணிபுரிந்து, தீக்காயங்களுக்கு உற்பட்டு, கடந்த...

வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் – ஐங்கரநேசன்

தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா மாவட்டச் செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக...

வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு!! பிரதமர் மஹிந்த வருகை!!

நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய வேலணையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். எதிர்வரும் ஜீலை 31 மற்றும் ஓகஸ்ட் 01 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள...

இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது விளிம்பில் இல்லை -சுகாதார அமைச்சு

இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளதென என கூறுவதற்கு இப்போது எந்த அடையாளமும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நான்காவது அலையின் முதல் கட்டத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது என்றும் பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏதும் இல்லை என இலங்கை...

யாழில் இராணுவச் சிப்பாய் தற்கொலை!!

யாழ்ப்பாணம் – நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த இராணுவச் சிப்பாயின் சடலம் இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில், வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக...