Ad Widget

கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் பலி!!

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்தில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது....

நாட்டில் கோவிட்-19 நோயினால் மேலும் 101 பேர் சாவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000ஐத் தாண்டியது!!

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 11 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில்...
Ad Widget

அத்தியாவசிய சேவைகள், தொழில் நடவடிக்கைகள் சிலவற்றுக்கு பயணத்தடை காலத்தில் அனுமதி

பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் உள்பட பல சேவைகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். அதன்படி, ஆடைத் தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழில், இயற்கை உர உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவை சுகாதார பரிந்துரைகளின் கீழ் அனுமதிக்கப்படுகின்றன. வங்கி மற்றும் பொருளாதார மையங்களின் இயங்குவதற்கான திகதிகள்...

யாழில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு!!

கொக்குவில் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை மீறி யாழில் பெரும்பாலானோர், பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆகவே இத்தகையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காகவே இந்த விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது பயணத் தடையை மீறி செயற்பட்ட சிலர்...

வடக்கு கடலினுள் பேரூந்துகள் – கடல் வளத்தினை அதிகரிக்க முயற்சி

வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், குறித்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில்...

நாட்டில் எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். முன்னதாக எதிர்வரும் 14ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நாட்டின் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இவ்வாறு பயணத்தடையை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.