Ad Widget

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் சாவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் இரண்டு நாள்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் கோவிட்-19 சிகிச்சை பிரிவில் உயிரிழந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அளவெட்டியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர்...

வடமராட்சியில் இருவர் உயிர்மாய்ப்பு!!

கோவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை – ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2...
Ad Widget

பயணக்கட்டுபாடுகள் நீடிக்கப்படுமா? – இராணுவத் தளபதி

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இன்று காலை வரையில் எவ்வித அறிவுறுத்தலும்...

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை – கல்வி அமைச்சர்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எந்த தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். மேலும் ஜூன் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரை...

தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானம்!!

பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஒன்லைன் வங்கியைப் பயன்படுத்துமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன. பெரும்பாலான தனியார் வங்கிகள் ஜூன் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டு திங்களன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவித்துள்ளன. அதன்படி, கொமர்சியல், சம்பத், செலான், DFCC, நேஷன் டிரஸ்ட், அமானா...