Ad Widget

யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்தன!

யாழ்.மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன்(புதன்கிழமை) நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த குறித்த பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள்...

பயணக்கட்டுப்பாடு நீடிப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்டார் இராணுவ தளபதி

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். முன்னர் அறிவிக்கப்பட்ட பிரகாரம் எதிர்வரும் 7 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் அவர்...
Ad Widget

வியாபார, தனிநபர் கடன்களுக்கு ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை சலுகை!!

கோவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு 2021 ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை முதல், வட்டி அல்லது இரண்டினையும் அறவிடுவதைப் பிற்போடுமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சலுகை மே மாதம் 15ஆம் திகதியிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறு மத்திய...

யாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்!

பயணத்தடை அமுலிலுள்ள வேளையில் யாழ்.குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் பயணத்தடை காரணமாக வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் அற்ற நிலையில் மூடப்பட்டுள்ள கடைகளை உடைத்து திருட்டு கும்பல் கைவரிசை காட்டி வருகின்றது. அத்துடன், வீடுகளுக்குள் சூட்சுமமான முறையில் உள்நுழைந்து, கிணற்றடியில் உள்ள மோட்டார் மற்றும் ஏனைய பெறுமதியான தளபாடங்களை வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும்...