Ad Widget

வடக்கு மற்றும் கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலைங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

வடக்கு மற்றும் கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலைங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தொழில்நுட்பத்தின் ஊடாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

இலங்கையில் நீடிக்கும் வெப்பமான காலநிலை – 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில், சூரியன் பூமிக்கு நேராக உச்சம் கொடுப்பதே இந்த கடும் வெப்பமான காலநிலைக்கு காரணமாகும்....
Ad Widget

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்கு கோரோனா தொற்று; ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 8 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உள்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ...

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையில் விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்: அரசாங்கம்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன் இணைக்கும் விமான நடவடிக்கைகள் இலங்கை வழியாக தொடங்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன்...

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் யாழில் பகிஷ்கரிப்புப் போராட்டம்!

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் மதிய உணவு இடைவேளையுடன் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக தமது போராட்டத்தை ஆரம்பித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்றதுடன் ஆளுநருக்கான மகஜரினையும்...

முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும்- காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவி கனகரஞ்சினி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இனப் படுகொலைக்கான சாட்சியங்கள் போதாது என சர்வதேச நிபுணர்களின் கருத்தைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து விக்னேஸ்வரன்

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினையைத் தூண்டப் பார்க்கின்றன என ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ கூறியுள்ளமை தொடர்பாக...