Ad Widget

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க எச்சரிக்கை விடுப்பு!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் யாழ். மக்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அதிபர், “யாழ். மாவட்டத்தில் அண்மைய...

யாழில் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதில், மாவட்ட கமநல...
Ad Widget

தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த

தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் அதனை தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

யாழ். முதல்வருடன் தொடர்பை பேணியவர்களுக்கான அவசர அறிவிப்பு!!

யாழ். மாநகர சபையின் முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பை பேணியவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், யா. மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, யாழ்ப்பாணம்...

வடக்கில் கோவிட்-19 நோய்த்தொற்றால் 11ஆவது நபர் உயிரிழப்பு

வடக்கு மாகாணத்தில் கோவிட் -19 நோயால் 11ஆவது நபர் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 82 வயதுடைய முதியவர் ஒருவரே நேற்றையதினம் உயிரிழந்தார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்மூலம் கோவிட் -19 நோயால் வடக்கு மாகாணத்தில் கடந்த 4 மாதங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் 5...

நெடுந்தீவு வைத்தியசாலை குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும்

நெடுந்தீவு மக்களின் பொது வைத்தியசாலை தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த வைத்தியசாலை தொடர்பில் உள்ள பிரச்சினைகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதற்கான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் சபையில் கேட்ட வாய் மூலமான கேள்விக்கு அமைச்சர்...

திருநெல்வேலி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல்வரை மூடல்!!

திருநெல்வேலி போதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். நல்லூர் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியில் உள்ள கடைகளின்...

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழில் திறந்து வைப்பு!

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில்நேற்று (புதன்கிழமை)காலைதிறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை புற்றுநோயியல் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர் திருமதி ஜானகி விதான பத்திரன கொழும்பிலிருந்து வருகை தந்து திறந்துவைத்தார் . இது குறித்து கருத்து தெரிவித்த யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர்...

யாழில் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் 24 பேருக்கும் உடுவில் மற்றும் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா ஒருவரும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை யாழ். சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மூவருக்கும் யாழ்ப்பாணம்...