Ad Widget

கிளிநொச்சி நகரில் பொலிஸாரின் பாவனையிலுள்ள காணியை அரச காணியாக்கும் முயற்சி இடைநிறுத்தம்!

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் பொலிஸாரின் பாவனையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரின் ஏ-9 வீதியில் பெண்கள் சிறுவர் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் திணைக்களப் பிரிவுகள் பயன்படுத்திவரும் காணியை அரச காணி எனத் தெரிவித்து அளவீடு செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. குறித்த பகுதிக்கு இன்று (புதன்கிழமை) காலை...

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய பேரணி யாழில் ஆரம்பம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி ஆரம்பமாகியுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், பேரணியாகச் சென்று நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நிறைவடையவுள்ளது. இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு...
Ad Widget

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!!

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் சந்தர்ப்பம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெறவுள்ளது. JLPT அல்லது NAT பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் இலவசமாக தொழில்...

பஸ் விபத்திற்கான காரணம் வௌியானது! புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை!!

தலைமன்னாரில் தனியார் பேரூந்து புகையிரதத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகிய சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரத கடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து நேற்று (16) மதியம் 2 மணியளவில் தலை மன்னார் பகுதியில் புகையிரதத்துடன்...

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆராயப்படும்

வரவிருக்கும் பண்டிகை காலங்களில் தேவைப்பட்டால் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இதேவேளை, கோரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வரவிருக்கும் பண்டிகை காலங்களில் நாட்டை மூடுவது அல்லது முழுமையான பயணக் கட்டுப்பாட்டை...

தொல்லியல் திணைக்களத்தால் கிளிநொச்சியில் குறிவைக்கப்படும் மற்றுமொரு சிவனாலயம்!!

கிளிநொச்சியில் அமைந்துள்ள உருத்திர புரீச்சகம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுக்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வாராச்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கோவில் வளாகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கோவில் அமைந்தள்ள வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்புடுவதாக ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தினால்...

பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவிக்கு கொரோனா தொற்று!!

பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்தோடு மன்னாரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த பெண் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர்....