Ad Widget

தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்குள்ளும் முளைத்தது தொல்பொருள் திணைக்கள அறிவித்தல்!!

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் அதிபர் விடுதி பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் சின்னம் என தொல்பொருள் திணைக்களத்தினால் அறிவித்தல் பலகை நாட்டப்பட்டுள்ளது. அந்த காணியை அடாத்தாக பிடிக்க முயலும், இலங்கை அமெரிக்க மிசன் திருச்சபையின் பாதிரியார்களே இதன் பின்னணியில் செயற்பட்டதாக பாடசாலை சமூகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் அதிபர் விடுதி காணி 1816ஆம் ஆண்டு...

யாழ்ப்பாணத்தில் புதனன்று நடைபேறும் பேரணிக்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவு

வடக்குக் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசாட்சியாளரின் முக்கியமாக தமிழின அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும், அவ்வாறான நடவடிக்கைகளை இழைத்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமென்றும் இவ்வாறான இனவழிப்பு நடவடிக்கைகள் மீளநிகழாமல் தடுக்கவும் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை அரசு ஏற்றுக் கொள்ளவைப்பதற்கான பிரேரனையை எதிர்வரும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற வேண்டுமென்றும் சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்து...
Ad Widget

பரீட்சைகள் தாமதமாகலாம் : இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை!!

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடப்பரப்புக்கள் நிறைவு செய்யப்பட்டிருக்காவிட்டால் பரீட்சைகளை தாமதமாகலாம். எனினும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான இறுதி தீர்மானம் இது வரை எடுக்கப்படவில்லை என்று பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித வீரகேசரிக்கு தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள...

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 422 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13 பேரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில்...