Ad Widget

யாழில் தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் 10வது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை ஆவலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் - நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு...

எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

உள்நாட்டு எரிவாயு விலையில் அதிகரிப்பை மேற்கொள்ள எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், எரிவாயு விலையை அதிகரிக்க அமைச்சரவையில் வர்த்தக அமைச்சரால் முன்மொழியப்பட்டதாக கூறினார். இந்த திட்டத்தை மைதிப்பாய்வு செய்ய அரசாங்கம் முடிவு செய்த போதும் விலை...
Ad Widget

காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

காரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவில்லை. காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் என எட்டு பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றைய பி.சி.ஆர்.பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அதாவது, காரைநகர் சாலையில் பணியாற்றுபவர்களில் 90பேரின் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையிலேயே, 8பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

கிளிநொச்சியில் பெண்ணொருவர் சடலமாக கண்டெடுப்பு!

கிளிநொச்சி அப்பாள் குளம் பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் 30 வயது மதிக்க தக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் காணப்படுகின்றதோடு குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்....

அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களைத் முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் ஆலோசனை!

அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களைத் முன்னெடுக்குமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.08) ஆலோசனை வழங்கினார். எதிர்காலத்தில் இலங்கையில் அந்நிய செலாவணி ஊடாக செயற்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தலைவர்களுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு வலியுறுத்தினார்....

பாடசாலைகள் திட்டமிட்ட வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பம்!!

மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென்றும் அமைச்சர் கூறினார். மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது...

யாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு

யாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் நேற்று அதிகாலை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதனை அடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில்...

யாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாம் காணப்பட்டவர்களில் 8பேர், காரைநகர் இ.போ.ச சாலையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் காப்பாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து...