Ad Widget

காணாமற்போன நெடுந்தீவு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களை தேடி இரண்டு நாள்களாக முன்னெடுக்கப்பட்ட பணியில் நயினாதீவு முனை கடலிலேயே ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவானிலிருந்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (பெப்.21) பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய...

வைத்தியருக்கு கொரோனாத் தொற்று கண்டறிவைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிறப்புக்குழு!

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ வல்லுநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை தொடர்பாக யாரும் அச்சமடையத் தேவையில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்தார். இதுகுறித்து, அவர்...
Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலையில் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருக்கு கோரோனா தொற்று!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சை பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை அன்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நோயாளி ஒருவருக்கும் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் உள்பட சிலரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று...

பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் கைது!!

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காணொளியொன்றினை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டுள்ளாார். வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு...

யாழ்.போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறப்பான சேவையாற்றி வரும் நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கே கோவிட் -19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்...

திருமண வைபவங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு

திருமண வைபவங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் திருமண வைபவங்களில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையினை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது. அத்துடன், திருமண வைபவங்களில் பங்கேற்பதன் ஊடாக அதிகளவான கொரோனா...

இலங்கையில் 450 மரணங்கள் பதிவு – 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா மரணங்களில் மொத்த எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்...