Ad Widget

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: பெயர் பலகையில் தமிழை முன்னுரிமையாக்கும் பணி முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடங்களுக்கான பலகைகளில் தமிழ் மொழியை முன்னுரிமையாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புரைக்கு அமைய உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகள் சீரமைக்கப்படுகின்றன. இதன்படி, சீரமைப்புச் செய்யப்பட்ட பெயர் பலகையொன்று மாநகர முதல்வரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) காண்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...

யாழ் போதனா வைத்தியசாலையில் உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது!!

யாழ்ப்பாணம் உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் போதனா வைத்தியசாலையில் இன்று திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விக்டோரியா வீதியில் உள்ள புதிய கிளினிக் கட்டடத் தொகுதியில் இந்த சிகிச்சை நிலையம் இன்று (ஜன.29) வெள்ளிக்கிழமை நண்பகல் திறந்து வைக்கபட்டது. இருதய சிகிச்சை வல்லுநர் பூ.லக்ஸ்மன் இந்த சிகிச்சை நிலையத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா...
Ad Widget

மாவட்ட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவது ஜனநாயக விரோதமானது – சி.வி.கே.சிவஞானம்

யாழ்.மாவட்ட பாடசாலைகள் தேசியப் பாடசாலைகள் ஆக்கப்படுதல் ஜனநாயக விரோதமானது எனவே இச்செயற்பாடு நிறுத்தப்படவேண்டும் என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வடக்குமாகாண ஆளுநரிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தின் பத்து பிரதான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளன எனவும் அவை வடக்கு மாகாண சபை...

யாழ்ப்பாணத்துக்கும் வந்துவிட்டது கொரோனா தடுப்பூசி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட்-19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று...

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மாத்தளைமற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப....

ஆறு வைத்தியசாலைகளில் இன்றைய தினம் தடுப்பூசிகள் ஏற்றப்படும்

இந்தியாவில் இருந்து நேற்றை தினம் கொண்டுவரப்பட்ட ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை இன்றைய தினம் ஆறு வைத்தியசாலைகளில் ஏற்றப்படவுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்குள் ஐந்து இலட்சம் தடுப்பூசிகளையும் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். தடுப்பூசிகளின் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவித அச்சமும் இல்லாது தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என...

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் – யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், “1985 ஆம் ஆண்டில் இருந்து...

ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் பவித்ரா வன்னியராச்சி!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று (வியாழக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹிக்கடுவையில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை கொட்டலவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், வருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் அடையாளம் காண தொடங்கியதால், நேற்று மாலை...