Ad Widget

3 நாளுக்கு முன் மருதனார்மடம் வந்த பருத்தித்துறை வாசிக்குக் கோரோனா தொற்று!!

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன் மருதனார்மடத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகத்துக்கு சென்றிருந்ததாகவும் அங்கு குடிதண்ணீர் குடித்ததாக அவர் சுகாதாரத் துறையினருக்கு தெரிவித்தார்....

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் ஐவருக்குத் தொற்று

மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று (ஜன. 4) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர்...
Ad Widget

சில இடங்ளில் 100 மி.மீ அளவுக்கும் அதிக மழை வீழ்ச்சி!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடை நீக்கம்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடையை நீக்குவதாக யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறி சற்குணராஜா அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையையும் கருத்திற் கொண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக விதிக்கப்பட்ட வகுப்பு தடை நீக்கப்பட்டுள்ளது. துணைவேந்தருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிரேஷ்ட...