2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்- இறுதி வாக்கெடுப்பில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய அடுத்த ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட யோசனைகளை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச சேவையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கான நலன் தொடர்பான யோசனைகள் இவற்றுள் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor