Ad Widget

சங்கானையில் மீன் சந்தை, மதுபானசாலை மூடல்: பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்

சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. மேலும், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர், குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சைக்கிள் கடை ஒன்றினைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை 3 நாட்கள் மூடப்பட்டுள்ளது. சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில்...

வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கெக்கிராவையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவரை கொவிட் 19சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...
Ad Widget

யாழில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம்- 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள 3 வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார். காரைநகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சென்று வந்த...

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தால் சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது – கல்வி அமைச்சர்

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை ஒத்திவைப்பதை தவிர்க்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டபடி பரீட்சை நடத்தப்படுமா என்பது குறித்த முடிவு ஒரு வாரத்திற்குள் எட்டப்படும்...

நினைவேந்தல் நடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அருட்தந்தை பிணையில் விடுதலை

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டார். மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக இளவாலையைச் சேர்ந்தவரும் புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வருமான அருட்தந்தை பாஸ்கரன், ஆயர் இல்லத்துக்கு அருகில் உள்ள புனித மருத்தினார் குருபீடத்துக்கு முன்பாக நேற்று மாலை 5.50...