பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமனம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய இந்து சமய விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும், கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட குறித்த இருவரும் நேற்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் கௌரவ பிரதமரிடம் தங்களது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

மீண்டும் யாழ்.மருத்துவ பீடத்தில் பி.சி.ஆர்.பரிசோதனை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி...
Ad Widget

கொரோனா அச்சுறுத்தல்: யாழ்.மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன

வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகர் ஊடாக தங்களது முழு விபரங்களை பதிய வேண்டும் என அம்மாவட்ட கொவிட் -19 உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது....