Ad Widget

கரவெட்டி பிரதேசத்தில் இரண்டு தனியார் கல்வி நிலையங்களுக்கு சீல்

வடமராட்சி, கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் அரசின் கட்டளையை மீறி இயங்கிய தனியார் கல்வி நிலையங்கள் இரண்டு நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகரால் மறு அறிவித்தல்வரை முத்திரையிடப்பட்டு மூடப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தலைமையிலான மாவட்ட கோவிட் -19 உயர்மட்டக் குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை...

செல்லும் இடங்களின் பதிவைப் பராமரிக்க பொதுமக்களிடம் பொலிஸ் கோரிக்கை!!

எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதால், பொதுமக்கள் தாம் செல்லும் இடங்களை அலைபேசியிலோ அல்லது ஒரு நோட்புக்கிலோ பராமரிக்குமாறு பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஒருவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை வழங்கும் அலைபேசி செயலியைப் பயன்படுத்தலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்ஸ்பெக்டர் அஜித் ரோஹானா தெரிவித்தார். மினுவாங்கோடா கோவிட் -19 கொத்தணியுடன் தொடர்புடைய...
Ad Widget

அண்மைய நாள்களில் பரவிவரும் கோரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதாகத் தொற்றுகிறது

நாட்டில் அண்மைய நாள்களில் பரவி வரும் கோரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கோரோனா வைரஸைப் பற்றி ஆராய்ந்து வரும் மருத்துவ வல்லுநர்கள், தற்போது பரவிவரும் வைரஸின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதாகவும், அது வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடுமெனக் கண்டறியந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர்,...

மன்னாரில் 922க்கு மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்- பதில் அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 922 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார். மன்னார்- பட்டித்தோட்டத்தை சேர்ந்த 130 குடும்பங்களை சேர்ந்த 443பேரும் பெரியகடை பகுதியை சேர்ந்த 166 குடும்பங்களை சேர்ந்த 479பேரும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது கும்பலொன்று தாக்குதல்!

முல்லைத்தீவு, முறிப்புப் பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன், வாள் முனையில் பொய் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரியவருவதாவது, முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின்...

யெங் ஜியேச்சி உள்ளிட்ட சீன உயர்மட்ட குழுவினர் பிரதமருடன் சந்திப்பு!

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி (Yang Jiechi) அவர்களின் தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினர் கடந்த 9ம் திகதி அன்று அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர். உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீன அரசாங்கத்தின் உயர்மட்ட இராஜதந்திர குழுவினர்...

ரிஷாட் பதியூதீனின் சகோதரரை மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில்...