Ad Widget

2017ம் ஆண்டுக்கான வடமாகாணத்தின் பாதீட்டு அறிக்கை தாக்கல்

வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்று அறிக்கையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றயதினம் சமர்ப்பித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அறுபத்தேழாவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது முதலமைச்சர் நிதிகூற்று அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். இதன்போது,

2017 ஆம் ஆண்டின் வட மாகாண சபை செலவீனங்களுக்காக, நிதி ஆணைக்குழுவினால் தேசிய பாதீட்டுத் திணைக்களத்திற்கு சிபாரிசு செய்யப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகைகளாக, மீண்டுவரும் செலவினங்களுக்காக ரூபா 19 ஆயிரத்து 321.73 மில்லியன் ஆகும்.

மத்திய அரசால் தொகுதிக்கொடையாக ரூபா 16 ஆயிரத்து 476.73 மில்லியன் ரூபாவும், மத்திய அரசின் வருமானமாக 2ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவும், மாகாண சபை வருமானமாக 545 மில்லியன் ரூபாவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாற்றுவதற்கான முத்திரை தீர்வைக் கட்டணம் 458 மில்லியன் ரூபா, நீதிமன்ற தண்டப்பணம் 65 மில்லியன் ரூபா, மூலதன செலவினங்களுக்காக 5 ஆயிரத்து 618.11 மில்லியன் ரூபா, பிரமான அடிப்படையிலான கொடை 551.2 மில்லியன் ரூபா, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருதிக்கொடை ஆயிரத்து 657.18 மில்லியன் ரூபா, பாடசாலைக் கல்வியை ஓர் அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்திட்டம் 315 மில்லியன் ரூபா, சுகாதார துறை அபிவிருத்தி கருத்திட்டம் 360 மில்லியன் ரூபா, வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்காண ஒதுக்கீடு 2 ஆயிரத்து 734.73 மில்லியன் ரூபா (வடக்கு வீதி இணைப்புத் திட்டம் 200.31 மில்லியன் ரூபா, வடக்கு வீதி இணைப்புத் திட்டம் மேலதிக நிதியிடல் 548.42 மில்லியன் ரூபா, இரணைமடு நீர்ப்பாசன அபிவிருதிக் கருத்திட்டம் ஆயிரத்து 77 மில்லியன் ரூபா, யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாடு கருத்திட்டம் 909 மில்லியன் ரூபா) என்று அவர் சபையில் தெரிவித்தார்.

எதிர்பார்க்கபடும் மேற்படி ஒதுக்கீட்டுத் தொகைகளுக்கு அமைவாக மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ரீதியாக அவற்றின் முன்னிரிமைத் தேவைகளை பொருத்து வருடாந்த நிதிக் கூற்றினை தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என வடக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பட்டார்.

Related Posts