2013ம் ஆண்டுக்கான பிரதம செயலாளர்களின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது

vijayaladsumi”2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னர் பிரதம செயலாளர்கள் அனைவரும் இணைந்து தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டமை மாகாண நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற இன்னுமொரு மைல்கல்லாகும்”

2013ம் ஆண்டுக்கான பிரதம செயலாளர்களின் மாநாடு வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ரில்கோ விடுதியில் கடந்த 6ம், 7ம் திகதிகளில் நடைபெற்றது.

மத்திய மாகாண பிரதம செயலாளர் திரு.எப்.டபிள்யூ.குணதாச, வட மத்திய மாகாண பிரதம செயலாளர் திரு.டபிள்யூ.ஜி.டயநாயக்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.சரத் அபயகுணவர்த்தன, வட மேல் மாகாண பிரதம செயலாளர் திரு.டபிள்யூ.பண்டார எக்கநாயக்க, சப்பிரகமூவ மாகாண பிரதம செயலாளர் திரு.எப்.பி.குலரட்ண, தென் மாகாண பிரதம செயலாளர் திரு.ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல, மேல் மாகாண பிரதம செயலாளர் திரு.ஜே.விஜயதுங்க, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஊவா மாகாண பிரதம செயலாளர் திரு.பி.வி.அமரசேகர ஆகிய ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த பிரதம செயலாளர்களும் இதில் பங்குபற்றியிருந்தார்கள்.

வட மாகாண பிரதம செயலாளர் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களை வழங்கினார். அதேபோல் ஏனைய பிரதம செயலாளர்களும் தமது மாகாணங்களில் நடைபெறும் செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.