2012ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் இடாப்புக்களை திருத்த ஏற்பாடு

2012ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட தேர்தல் வாக்காளர் இடாப்புக்களை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இதற்கான கலந்துரையாடல்கள் வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளன. பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் தோறும் இக்கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள உதவித் தேர்தல் ஆணையாளர் பி.குகநாதன் தெரிவித்துள்ளார்.

காலை 9 மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் 11 மணிக்கு உடுவில் பிரதேசத்திலுள்ள கிராம அலுவலர்களுக்கும்; அறிவுறுத்தல்க் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.