2ம் வகை நீரிழிவு நோய்க்கான மருந்து தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு!

diabities2_medicineஉலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துன்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதினொன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப்படும்.இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாத காலத்திற்கு தாக்குப்பிடிக்கக் கூடியதாக அவரது கலங்கள் தேவையான சுரப்புக்களை மேற்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் என்றும் நாளாந்தம் இதற்கான இன்சுலினை ஊசியூடாகப் பெற்று வந்தவர்கள் இனி மாதம் ஒரு தடவை ஏதோ முடி திருத்துவது போல இந்த ஊசியை சர்வ சாதாரணமாக உட்செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நீரிழிவு நோய் பெரியவர்களை மாத்திரமல்ல பல சிறியவர்களைக்கூட தனது பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webadmin