183 மூன்று குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள்

toilet-kachchathevuuயாழ்.மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 183 மூன்று குடும்பங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதி உதவியுடன் மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன’ என்று செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்.மாவட்ட கிளை தலைவர் கு.பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இன்றும் கூட மலசலகூட வசிதிகள் அற்ற நிலமை காணப்படுகின்றது.

பருத்தித்துறை பிரதேசத்தில் தொன்னூறு ஆயிரம் ரூபா பெறுமதியில் தலா 138 மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மக்கள் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வளலாய் கிராமத்தில் உள்ள நாற்பத்தைந்து குடும்பங்குளுக்கு நாற்பது மில்லியன் ரூபா செலவில் 45 மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவைகளை விட பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதின்நான்கு பாடசாலைகளுக்கு பதினாலு மில்லியன் ரூபா செலவில் மலசலகூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor