Ad Widget

15 மணி நேர மின்வெட்டு அபாயம் இல்லை – அரசியல்வாதிகள் பொய் சொல்கிறார்கள்!!

எதிர்காலத்தில் 15 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அரசியல்வாதிகள் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து அடிப்படை ஆதாரமற்றது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் யாருடைய ஆலோசனையின் பேரில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் எனத் தெரியவில்லை அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு நாளை மாலை 06.30 மணி முதல் பரீட்சை நடைபெறும் ஜூன் 01 ஆம் திகதி வரை மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை அறிவித்தார்.

இதேவேளை, நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து இழந்த 260 மெகாவோட் மின்சாரம் இன்று முதல் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படும் என்றும் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

Related Posts