Ad Widget

144 சிறுவர்களுக்கு மருத்துவ உதவி தேவை; யாழ். செயலக அறிக்கை கூறுகிறது

needhelpயாழ்.மாவட்டத்தில் 144 சிறுவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக யாழ்.மாவட்ட செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு 232 சிறுவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இது 166 ஆகக் குறைவடைந்தது. கடந்த ஆண்டு இது மேலும் குறைவடைந்து 144 ஆகியுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 674 சிறுவர்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர்களில் 144 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக யாழ்.மாவட்ட செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 4 சிறுவர்களும் வேலணை பிரதேச செயலர் பிரிவில் 5 பேரும் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 2 பேரும் யாழ்ப்பாணப் பிரதேச செயலர் பிரிவில் 6 பேரும்.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 3 பேரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 9 பேரும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 16 பேரும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 7 பேரும்

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 36 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 6 பேரும் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 7 பேரும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 11பேரும்

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 4 பேருமாக 144 சிறுவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts