வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பியவருக்கு 10 நாள்களின் பின் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 10ஆம் திகதி தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய அவர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாள்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து கடந்த 24ஆம் திகதி அவர், மத்துகமவிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் 10 நாள்களின் பின்னர் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை மாற்றத்தால் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோரோனா வைரஸ் (COVID 19) தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் அந்த நபர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.