யாழ்., பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 10 ஆயிரம் பனை விதைகள் நாட்டும் திட்டம் இன்று புதன்கிழமை (22) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதியுதவியில் முன்னெடுக்கும் இந்த பனை விதைகள் நாட்டும் திட்டம் இன்று புதன்கிழமை (22) நகரசபை சிறுவர் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வரும் நாட்களில் படிப்படியாக வல்லைவெளி வரையில் இந்த பனம் விதைகள் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
யாழ். மாவட்டத்தில் அழிவடைந்த பனை மரங்களின் எண்ணிக்கையை ஈடு செய்வதற்கும், பனந் தோப்புக்களை உருவாக்கும் நோக்குடனும் இந்த பனை விதைகள் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.