இலங்கையில் புழக்கத்தில் இருந்த ஒரு சதம் மற்றும் 10 சதம் நாணயக் குற்றிகளை அதிக விலைகொடுத்து கொள்வனவு செய்துவரும் வெளிநாட்டு நபர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு புறம் தென்னை மரத்தையும் மறுபுறம் ராணி விக்டோரியாவின் புகைப்படத்தையும் கொண்ட இந்த நாணயங்களில், ஒரு சத த்துக்கு மூவாயிரம் ரூபாவும் 10 சத்துக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
வெளிநாடொன்றிலிருந்து வந்து இலங்கையில் நங்கூரமிட்டுள்ள கப்பலொன்றைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவரே, இலங்கையின் பழைமைவாய்ந்த இந்த நாணயங்களை விலைகொடுத்து வாங்கி வருகிறாராம்.
இவர், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இந்த நாணயக்குற்றிகளைச் சேகரித்து வருவதாகவும் இவர் தொடர்பில் பொலிஸார் தகவல் திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.