Ad Widget

மீள்குடியேறும் மக்களுக்குரிய அவசர தேவைகள் பூர்த்தி

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து தற்போது விடுவிக்கப்பட்டு, மீள்குடியேற்றத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள வளலாய் ஜே – 284 கிராம அலுவலர் பிரிவு மக்கள் விடுத்த அவசர கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வளலாயில் தமது காணிகளை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து உரையாடிய போது, அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

அவர்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற 5 நீர்த்தாங்கிகளை கோப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக அனுப்பியுள்ளோம்.

கத்தி, கோடாரி, குப்பைவாளி போன்ற உபகரணங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இளைப்பாறுவதற்காக தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து தரும்படி கோரியிருந்தனர். ஒரு கொட்டகை இன்று அமைக்கப்படுகின்றது.

கடலோரத்தில் இருக்கும் கற்களை அகற்றி மீன்பிடிப்பதற்கு வசதி செய்து தரும்படி கேட்டனர். கரையோர பேணல் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் கரையோரப் பகுதியை துப்புரவு செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். ஏனைய தேவைகள் அடையாளப்படுத்தப்பட்டு மாவட்டச் செயலகத்தால் நிறைவேற்றப்படும் என்றார்.

Related Posts