Ad Widget

வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் உதவி!

அண்மையில் ஏற்பட்ட மழை, வௌ்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளது.

நாளை(04) லண்டன் லோட்ஸில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவிருக்கும் இந்த நிவாரண உதவித் திட்டத்துக்கு ஏற்கனவே பல மில்லியன் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக இலங்கை கிரிக்கெட் ஊழியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீளக்குடியமர்த்தும் நோக்குடனான ஒரு சிரமதானப் பணியில் கடந்த சனிக்கிழமை ஈடுபட்டனர்.

இதன்போது உலர்உணவுகள், படுக்கை உபகரணங்கள், உடைகள் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பொருட்கள் கொண்ட 3000 நிவாரணப் பொருட்களை இலங்கை கிரிக்கெட் சபை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்தது. அதேநேரம் 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளிலும் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிவாணைப் பணிகளின் இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் பாடசாலை புத்தகங்கள், சீருடைகள் என்பனவும் வழங்கப்படவிருக்கின்றன.

Related Posts