வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

Jaffna Teaching Hospitalயாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது நால்வர் கொண்ட கும்பல் வைத்தியசாலையின் நுழைவாயிலில் வைத்து நேற்று மாலை தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

‘வைத்தியசாலை விடுதியில் தங்கியுள்ள நோயாளர் ஒருவரைப் பார்வையிடுவதற்காக திங்கட்கிழமை (31) மாலை வந்திருந்த நால்வரை, பார்வையிட அனுமதிசீட்டு (பாஸ்) இல்லாத காரணத்தினால் வைத்தியசாலைக்குள் செல்வதற்கு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் தடுத்துள்ளார்.

இதனால் முரண்பட்டுக் கொண்ட குறித்த நால்வரும் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து வைத்தியசாலைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதினை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts